/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தகனமேடைக்கு ஜெனரேட்டர், கேமரா வாங்க முடிவு
/
தகனமேடைக்கு ஜெனரேட்டர், கேமரா வாங்க முடிவு
ADDED : மே 31, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம், தலைவி லதா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தார்.
அதில் பார்க் சாலை மற்றும் அரசு தொடக்கப்பள்ளி அருகே சேதமான கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்; மாணவர் விடுதி அருகே ஆழ்துளை குழாய் கிணற்றை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை; காவிரி குடிநீர் குழாய் பதிக்க, பார்க் சாலை மற்றும் பழைய போலீஸ் ஸ்டேஷன் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு சீரழிந்த சாலையை சீரமைத்தல்; எரிவாயு தகன மேடைக்கு ஜெனரேட்டர், கேமரா வாங்குதல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.