தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பத்திரப்பதிவு அலுவலகம் முற்றுகை

பத்திரப்பதிவு அலுவலகம் முற்றுகை

பத்திரப்பதிவு அலுவலகம் முற்றுகை


ADDED : ஏப் 21, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: நில உரிமையாளருக்கு தெரியாமலேயே, மூன்று நபர்களுக்கு போலி கிரயம் செய்ததாக கூறி, பாதிக்கப்பட்ட நபர்கள் பத்திரப்ப-திவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்-பட்டி கிராமம், மேல்மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 44. சின்னபையன், 42. இவர்களது தந்தை பெயர் பெருமாள். இவருக்கு கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில், 77 சென்ட் நிலம் உள்-ளது. கஞ்சநாயக்கன்பட்டி சர்வே எண்ணில் கிருஷ்ணன் மகன் பெருமாள் என்று பெயரில் இருந்த நிலத்தை, கஞ்சநாயக்கன்-பட்டி சட்டியான்கொட்டாய் பகுதியை சேர்ந்த, மற்றொரு கிருஷ்ணன் மகன் பெருமாள் என்பவர் கடந்த, பிப்., மாதம் ஜெயலட்சுமி என்பவர் பெயரில் போலி கிரயம் செய்ததாக கூறப்-படுகிறது.

ஜெயலட்சுமி என்பவர், நல்லதம்பி பெயரிலும், நல்லதம்பி என்-பவர் தொட்டனசெட்டி என்பவர் பெயரில் போலி கிரயம் செய்-துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் உறவினர்கள், என 100க்கும் மேற்பட்டோர், ஆவணங்கள் இல்லாமல் போலி கிரயம் செய்ததாக, காடையாம்பட்டி சார்பதிவாளர் பாஸ்க-ரனை கண்டித்து நேற்று காலை, 11:00 மணிக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களிடம், பதிவாளர் பாஸ்கர், முறையாக விசாரணை நடத்தி, வரும் வெள்ளிக்கிழமைக்குள் உரிய நடவ-டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனால் ஒரு மணி நேரம் போராட்டத்துக்கு பின் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us