/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் தவித்த மான் உயிருடன் மீட்பு
/
கிணற்றில் தவித்த மான் உயிருடன் மீட்பு
ADDED : செப் 28, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணற்றில் தவித்த
மான் உயிருடன் மீட்பு
ஓமலுார், செப். 28-
காடையாம்பட்டி தாலுகா, தாராபுரம் ஊராட்சி பொன்னவாயன்காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் வடிவேல், 52, விவசாயி. இவரது கிணற்றில் புள்ளி மான் தவறி விழுந்துள்ளதாக, காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தார். வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி, மானை கயிறு மூலம் உயிருடன் மிட்டனர். டேனிஷ்பேட்டை வனவர் சுரேஸிடம் ஒப்படைத்தனர். மானுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.