/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உதவித்தொகை வழங்க தாமதம் 2,000 முதியோர் பரிதவிப்பு
/
உதவித்தொகை வழங்க தாமதம் 2,000 முதியோர் பரிதவிப்பு
ADDED : செப் 19, 2024 07:41 AM
சங்ககிரி: சங்ககிரி தாலுகாவில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உள்பட, 15,000க்கும் மேற்பட்டோர், இடைப்பாடி தாலுகாவில், 18,000க்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்த உதவித்தொகைகள், வங்கி கணக்குகள் மூலமும், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு, அஞ்சல் துறை மூலமும் வழங்கப்படுகின்றன.
வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் உதவித்தொகை மாதந்தோறும் அந்தந்த தாலுகாவில் உள்ள அத்திட்ட தாசில்தார் மூலம் வழங்கப்படுகிறது. ஒன்று முதல், 5க்குள், பயனாளிக்கு வங்கி மூலமோ,
போஸ்ட்மேன் மூலமோ வழங்கப்படும். ஆனால் செப்டம்பரில், அஞ்சல் நிலையம் மூலம் வழங்கப்படும் உவித்தொகை, இதுவரை வழங்கப்படவில்லை.குறிப்பாக சங்ககிரி தாலுகாவில், 1,000க்கும் மேற்பட்டோரும், இடைப்பாடி தாலுகாவில், 1,100க்கும் மேற்பட்ட முதியோரும் உதவித்தொகை பெறாமல், தினமும் போஸ்ட்மேனை பார்த்து கேட்கின்றனர். அவரும் தினமும்,
'பணம் வரவில்லை' என கூறி செல்கிறார். இதனால் முதியோர் பணத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் பலரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து சங்ககிரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ''இந்த மாதம் முதல் சென்னை அலுவலகத்தில் இருந்து பணம் அனுப்பப்படுகிறது. இதுகுறித்து விசாரித்து விரைவில் வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

