/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடுகளை கொல்லும் நாய்களை பிடிக்க கோரிக்கை
/
ஆடுகளை கொல்லும் நாய்களை பிடிக்க கோரிக்கை
ADDED : மே 29, 2025 01:32 AM
மேட்டூர் ;வீரக்கல்புதுார் தேர்வு நிலை டவுன் பஞ்சாயத்து, 8வது வார்டு ஆட்டோ டிரைவர் ரமேஷ், அவரது மனைவி கோகுலபிரியா ஆகியோர் வளர்த்து வந்த ஆடுகளை, நாய்கள் கடித்து கொன்றன. இதனால் பாதிக்கப்பட்ட தம்பதியர், இறந்த ஆட்டை, டவுன் பஞ்சாயத்து அலுவலக நுழைவாயிலில் போட்டு, நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் அதே பட்டியில் புகுந்த தெருநாய்கள், ஒரு ஆட்டை இழுத்துச்சென்று, மற்றொரு ஆட்டை கடித்து காயப்படுத்தியது. இழுத்து சென்ற ஆட்டை, நாய்கள் கோம்புரான்காடு சாலையோரம் போட்டு கடித்து தின்றன.
இதனால் நாய்கள் அட்டகாசத்தை தடுக்கக்கோரி, 14வது வார்டு கவுன்சிலர் ஜோதிசேகர், கோகுலபிரியா உள்ளிட்ட வார்டு மக்கள், மேட்டூர் ஆர்.டி.ஓ., உதவியாளர் புரு ேஷாத்தமன், தாசில்தார் ரமேஷிடம் நேற்று மனு கொடுத்தனர்.