/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தரப்படுத்த கோரிக்கை
/
அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தரப்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 24, 2025 01:44 AM
சேலம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின், 14வது மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார்.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்குதல்; சுமை பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம்
அமைத்தல்; கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி, போனஸ் வழங்குதல்; மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல்; உருக்காலையில் காலியாக உள்ள, 1,400 ஏக்கர் நிலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை விரைவாக அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசினார். உதவி தலைவர்கள் தியாகராஜன், வெங்கடபதி உள்பட பலர் பங்கேற்றனர். இன்று, 2ம் நாளாக பேரணி, கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.