/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பீடி மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வலியுறுத்தல்
/
பீடி மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வலியுறுத்தல்
பீடி மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வலியுறுத்தல்
பீடி மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2025 02:28 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட பீடி சுருட்டு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு, தலைவர் சித்தாரா பேகம் தலைமையில் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் கைபானி வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் ஸ்ரீராம், தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலர் திருச்செல்வன் ஆகியோர் பேசினர்.
பாரம்பரிய தொழிலான பீடி தொழிலை நலிவில் இருந்து காக்க வேண்டும். பீடி மீதான, 28 சதவீத ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும். போலி பீடி உற்பத்தி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பீடி சுற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். 1,000 பீடி சுற்ற அடிப்படை சம்பளம், 300 ரூபாய் என உயர்த்த வேண்டும்.
அகவிலைப்படி கணக்கீட்டில், 1,000 பீடிக்கு, 10 காசாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.