/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காடையாம்பட்டி மலைக்கிராமங்களில் சாராய விற்பனையை தடுக்க கோரிக்கை
/
காடையாம்பட்டி மலைக்கிராமங்களில் சாராய விற்பனையை தடுக்க கோரிக்கை
காடையாம்பட்டி மலைக்கிராமங்களில் சாராய விற்பனையை தடுக்க கோரிக்கை
காடையாம்பட்டி மலைக்கிராமங்களில் சாராய விற்பனையை தடுக்க கோரிக்கை
ADDED : ஜூன் 21, 2024 07:28 AM
ஓமலுார் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்டு வீராச்சியூர், பூமரத்துார், கண்ணப்பாடி, சுரக்காபட்டி, கொலவூர், கொண்டையனுார் மலைக்கிராமங்கள் உள்ளன.
அப்பகுதிகளில் சிலர் சாராயம் காய்ச்சி உள்ளூர் மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டங்களுக்கு பொம்முடி, ஏற்காடு வழியே கொண்டு சென்று விற்பதாக குற்றச்சாட்டு உள்ளது.ஓமலுாரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கரும்பாலைகளில் வெல்லம் தயாரிகப்படுவதால் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான மூலப்பொருட்களான வெல்லம் உள்ளிட்டவை, அருகே உள்ள மலைக்கிராமங்களுக்கு எளிதாக கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றை போலீசாரும், வனத்துறையினரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 40க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நடந்துள்ளது. சிலருக்கு பார்வை பறிபோனதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காடையாம்பட்டி தாலுகா மலைக் கிராமங்களில் வனப்பகுதியில் பேரல்களில் பதுக்கி சாராயம் விற்பதை தடுக்க, மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு போலீசார் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.