/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,
சேலம், கோட்டை ஸ்டேட் வங்கி முன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாநகர தலைவர் கோபி தலைமை வகித்தார். அதில் கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தம் செய்யாமல் அப்படியே வெளியிட, மத்திய அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மாவட்ட செயலர் பெரியசாமி பேசினார். பொருளாளர் வெற்றிவேல், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் டார்வின், மாநகர தலைவர்கள் விமல்குமார், பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.