/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிஜிட்டல் பயிர் சர்வே கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
டிஜிட்டல் பயிர் சர்வே கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2024 01:39 AM
டிஜிட்டல் பயிர் சர்வே
கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம், நவ. 19-
தமிழகத்தில், 'டிஜிட்டல் பயிர் சர்வே' பணியை, ஒரு மாதமாக வி.ஏ.ஓ.,க்கள் அறவே புறக்கணித்த நிலையில், வேளாண் மாணவர்களை வைத்து, அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் பவித்ரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சம்சீர்அகமது பேசுகையில்,'' பயிற்சி பெற்ற வி.ஏ.ஓ., உள்ளிட்ட கீழ்நிலை பணியாளர்களை வைத்து டிஜிட்டல் பயிர் சர்வே செய்யாமல், வேளாண் மாணவர்களை வைத்து சர்வே செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். வேளாண் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அடையாள அட்டை இல்லை. எந்த வித ஊதியமும் இன்றி, அவசர கதியில் அளவீடு பணி செய்வது தான் சமூக நீதியா? வேளாண் மாணவர்களை வைத்து டிஜிட்டர் பயிர் சர்வே செய்வதை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேண்டும்,'' என்றார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.