/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவர் கல்வி கடன்களை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
/
மாணவர் கல்வி கடன்களை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 20, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கோட்டை மைதானத்தில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
உழைப்போர் இயக்க மாவட்ட அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். அதில் அனைத்து மாணவர்களின் கல்வி கடன்களை ரத்து செய்தல்; தமிழகத்தில் உள்ள, படித்த ஒரு கோடி வேலையற்றோரின் வேலை உரிமைக்காகவும், வழிகாட்டும் தகுதி தேர்வுகளை ரத்து செய்தல்; தாய் தமிழ்மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் தமிழர் கலாசார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினர் பங்கேற்றனர்.