/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துணை அஞ்சலகத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
/
துணை அஞ்சலகத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2024 07:33 AM
சேலம் : சேலம், ஜாகீர் அம்மாபாளையம், விஜயராகவன் நகரில் இயங்கி வந்த காசக்காரனுார் துணை அஞ்சலகம், கடந்த, 19ல் மூடப்பட்டது. அதை கண்டித்து வாடிக்கையாளர்கள், துணை அஞ்சலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டும் பலனில்லை. இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு, சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, மூடிய அஞ்சலகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தினர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் கூறுகையில், ''25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிய துணை அஞ்சலகத்தில், நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறி திடீரென மூடியது கண்டிக்கத்தக்கது. அஞ்சலகத்தை மீண்டும் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உண்ணாவிரதம், மறியல் என, தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். லாப நோக்கமின்றி சேவை உணர்வுடன் அஞ்சலகம் இயக்கப்பட வேண்டும்,'' என்றார்.

