/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு வழங்கிய நிலம் மீட்க ஆர்ப்பாட்டம்
/
அரசு வழங்கிய நிலம் மீட்க ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 29, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: அம்பேத்கர் மக்கள் மையம், தலித் விடுதலை இயக்கம் சார்பில் நேற்று காலை மேட்டூர் ஸ்டேட் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இயக்க மாநில இளைஞரணி செயலர் பீமராவ் தொடங்கி வைத்தார். அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார்.
இதில் சேலம் மாவட்டத்தில், 4,876 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட, 20,000 ஏக்கர் பஞ்சமி நிலம், மேட்டூர் வட்டத்தில், 42 கிராமங்களில் இலவசமாக வழங்கப்பட்ட, 2,200 ஏக்கர் நிலம் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த நிலங்களை மீட்டு அரசு உரிய நபர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.