/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
/
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 21, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் டெங்கு ஒழிப்பு விழிப்-புணர்வு முகாம் நேற்று நடந்தது. சந்தை நிர்வாக அலுவலர் மகேந்திரன் தலைமை வகித்தார். அதில் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் தடுப்போம்; சுற்றுச்சூழலை துாய்மையோடு காப்போம்; கொசு உற்பத்தி இடங்களை அழிப்போம் என, விழிப்புணர்வு ஏற்-படுத்தப்பட்டது.
அதேபோல் சிரட்டை, பனை உள்ளிட்டவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. துணை நிர்வாக அலு-வலர் வெங்கட்ராமன், தமிழ்நாடு அனைத்து உழவர்சந்தை விவ-சாயிகள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தங்கவேல், மாநக-ராட்சி அலுவலர்கள்,
துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.