UPDATED : அக் 17, 2026 04:50 AM
ADDED : அக் 17, 2026 04:13 AM

சேலம்; சேலம், அம்மாபேட்டை மண்டலத்தில் மாநகராட்சி கமிஷனர் லலித் ஆதித்ய நீலம் நேற்று ஆய்வு செய்தார். குறிப்பாக நஞ்சம்பட்டியில் வீடுகள் தோறும் சென்று, டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களின் பணியை பார்வையிட்டார்.
அப்போது வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடரால் சுத்தம் செய்து இறுக்கமாக மூடி வைக்கவும், 'ஏசி' இயந்திர நீர், பூந்தொட்டிகளில் உள்ள நீரை தினமும் அகற்றவும் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மிலிட்டரி பிரதான சாலை, கோவிந்த ராஜ் தெரு, நஞ்சம்பட்டி தெரு, வெங்கடாஜலம் தெரு பகுதிகளில், குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் துார்வாரும் பணிகள், சுகாதார வளாக அடிப்படை
வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மாநகர நல
அலுவலர் ராம்குமார் உடனிருந்தார்.
