/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறை இருதய சிகிச்சை விழிப்புணர்வு
/
'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறை இருதய சிகிச்சை விழிப்புணர்வு
'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறை இருதய சிகிச்சை விழிப்புணர்வு
'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறை இருதய சிகிச்சை விழிப்புணர்வு
ADDED : பிப் 17, 2024 07:13 AM
சேலம் : இருதய சிகிச்சை தொழிற்நுட்பவியலாளர் தினத்தையொட்டி, சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை, இருதய சிகிச்சை தொழிற்நுட்ப பிரிவு, ஆட்டையாம்பட்டியில் விழிப்புணர்வு நிகழச்சி, இலவச மருத்துவ முகாமை, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி நடத்தினர்.
துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் முருகபிரகாஷ், மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இதில் ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் இந்திராணி, எஸ்.ஐ.,க்கள் காமராஜ், ராமன் பங்கேற்றனர்.
முன்னதாக துறை மாணவர்கள், ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், இருதய நோய், குறிப்பாக மாரடைப்பு ஏற்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, முதலுதவி சிகிச்சை முறை குறித்து, மவுன மொழி நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மக்களுக்கு இலவச இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தேவைப்படுவோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை, துறையின் இருதய சிகிச்சை தொழிற்நுட்ப பிரிவு பொறுப்பாளர் சுஸ்மிதா, உதவி பேராசிரியர்கள் தாமின், சிவரஞ்சனி செய்திருந்தனர்.