/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செயற்கை ஓடுதளம் துணை முதல்வர் அடிக்கல்
/
செயற்கை ஓடுதளம் துணை முதல்வர் அடிக்கல்
ADDED : ஜன 01, 2026 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் அருகே கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், 18.06 ஏக்கரில், 20 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன அளவில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு, 11.40 கோடி ரூபாய் மதிப்பில், செயற்கை ஓடுதளம்(சிந்தடிக் ட்ராக்) அமைக்க, அடிக்கல் நாட்டும் விழா, நேற்று நடந்தது.
அப்பணியை, சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம், துணை முதல்வர் உதயநிதி, தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லுாரி மைதானத்தில் நடந்த விழாவில், கலெக்டர் பிருந்தாதேவி, அப்பணியை, வீரர், வீராங்கனைகளுடன் இணைந்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்பட பலர் பங்கேற்றனர்.

