/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபரை கல்லால் தாக்கிய ரவுடி கைது
/
வாலிபரை கல்லால் தாக்கிய ரவுடி கைது
ADDED : ஜன 01, 2026 04:59 AM

சேலம்: சேலம், தாதகாப்பட்டி, சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன், 28. இவர் பூர்வீகம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தேஸ்வரன், 28. இவர், 18 ஆண்டுக்கு முன், சேலம், தாதகாப்பட்டி, சண்முகா நகரில் குடியேறி, அதே பகுதியில் உள்ள அடார்னஸ் கடையில் பணிபுரிகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த விதவை பெண்ணை காதலித்து, விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம், அப்பகுதியை சேர்ந்த ரவுடி பழனிபாரதி, 27, மதுபோதையில் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். இதை அறிந்து சித்தேஸ்வரன், பழனிபாரதியிடம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர், தகாத வார்தையில் பேசி கல்லால் சித்தேஸ்வரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சித்தேஸ்வரனை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, பழனிபாரதியை கைது செய்தனர்.

