/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்தை பணி அதிகாரிகளுக்கு 'திருப்தி' காய்கறி வியாபாரிகளுக்கு 'அதிருப்தி'
/
சந்தை பணி அதிகாரிகளுக்கு 'திருப்தி' காய்கறி வியாபாரிகளுக்கு 'அதிருப்தி'
சந்தை பணி அதிகாரிகளுக்கு 'திருப்தி' காய்கறி வியாபாரிகளுக்கு 'அதிருப்தி'
சந்தை பணி அதிகாரிகளுக்கு 'திருப்தி' காய்கறி வியாபாரிகளுக்கு 'அதிருப்தி'
ADDED : ஜன 01, 2026 05:00 AM
மேட்டூர்: தினசரி காய்கறி சந்தையை, நெடுஞ்சாலை அருகே கட்டுவதற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தது தொடர்பாக நடந்த பேச்சில், அங்கு கட்டினால் சாலை விரிவாக்கத்தின்போது இடிக்க நேரிடும் என, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஆனால் அதற்கு வியாபாரிகள், அதிருப்தி அடைந்தனர்.
மேட்டூர் தினசரி காய்கறி சந்தையில், நகராட்சி சார்பில், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, 20க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. அந்த கடைகளை இடித்து அகற்றி, புது கடைகள் கட்ட நகராட்சி முடிவு செய்தது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 77 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கியது. தொடர்ந்து கடந்த, 6ல் பூமிபூஜை நடந்து பணி தொடங்கியது. இந்நிலையில் நெடுஞ்சாலை அருகே கட்ட, காய்கறி வியாபாரிகள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக நேற்று, நகராட்சி உதவி பொறியாளர் கவின்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், சந்தையில் வியாபாரிகளுடன் பேச்சு நடத்தினர்.
அப்போது, 'மேட்டூர் மேற்கு பிரதான சாலை, 100 அடி அகலம் கொண்டது. அதன் அருகே கடைகளை கட்டினால் சாலை விரிவாக்கத்தின்போது இடித்து அகற்ற நேரிடும். தற்போது, 47 கடைகளுடன், 24 மீ., அகலம், 31 மீ., நீளம் கொண்ட கட்டடம் கட்டப்படுகிறது. அதில் பழைய கடைகளை விட கூடுதல் கடைகள் உள்ளன. கூடுதல் வியாபாரிகள் கடை நடத்த முடியும்' என, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஆனால் வியாபாரிகள், அதிருப்தி அடைந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

