/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டு மனை கிடைக்காத விரக்தி ஆதரவற்ற மா.திறனாளி விபரீதம்
/
வீட்டு மனை கிடைக்காத விரக்தி ஆதரவற்ற மா.திறனாளி விபரீதம்
வீட்டு மனை கிடைக்காத விரக்தி ஆதரவற்ற மா.திறனாளி விபரீதம்
வீட்டு மனை கிடைக்காத விரக்தி ஆதரவற்ற மா.திறனாளி விபரீதம்
ADDED : ஜன 01, 2026 05:00 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டை அடுத்த சின்னம்மாபேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி லலிதா, 32. நேற்று காலை, 10:40 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்தார். திடீரென சேலையில் தீப்பற்ற வைத்துக்கொண்டார். அங்கிருந்த துாய்மை பணியாளர்கள், உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அவரிடம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷாலினி விசாரித்தார்.
அப்போது லலிதா கூறியதாவது: கணவரால் கைவிடப்பட்ட நான் ஆதரவின்றி உள்ளேன். மூத்த மகள், 7ம் வகுப்பு படிக்கிறாள். 10 நாட்களுக்கு முன், காய்ச்சலால், 2வது மகள் இறந்து விட்டாள். வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து ஓராண்டாக அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர். இன்று(நேற்று) 2ம் நாளாக வந்தபோது, காவலாளி அனுமதிக்காமல் பேசினார். இந்த மனவேதனையுடன், வீட்டுமனை கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று முன்தினம், லலிதா வந்து, நேர்முக உதவியாளர் அலுவலகம் முன் மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து, நேற்று வந்த அவர் விபரீத முடிவெடுத்து, தடுக்கப்பட்டதால் உயிர் தப்பினார். பின் அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள், பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

