/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி
/
மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஜன 01, 2026 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார், ஆர்.சி.செட்டிப்பட்டியில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது.
மைய இயக்குனர் விமல் தலைமை வகித்தார். சேலம், செவ்வாய்ப்பேட்டை பங்குத்தந்தை அழகுசெல்வன், 60 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். மைய மேலாளர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.

