/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற துணை முதல்வர் வலியுறுத்தல்
/
மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற துணை முதல்வர் வலியுறுத்தல்
மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற துணை முதல்வர் வலியுறுத்தல்
மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற துணை முதல்வர் வலியுறுத்தல்
ADDED : செப் 17, 2025 01:43 AM
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், துணை முதல்வர் உதயநிதி தலைமையில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், திட்டமிட்டபடி பாதிக்கும் மேல் முடிவடைந்துள்ளது. 45 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்.
கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அதிக மனுக்கள் வந்துள்ளன. அவற்றை கவனமாக பரிசீலித்து விரைவாக தீர்வுகாண வேண்டும். நலன்காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்களுக்கு மருத்துவ சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் அனைத்து ஊராட்சிகளுக்கு வழங்கி, பயன்படுத்த வலியுறுத்த வேண்டும்.
அரசு விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்
புதல்வன், காலை உணவு திட்டம் என முத்திரை திட்டங்கள் மக்களிடம் நற்பெயர் பெற்றுள்ளது. குடிநீர், சாலை பராமரிப்பு, மின்விளக்கு போன்ற அடிப்படை தேவைகளை குறித்து மக்களின் கோரிக்கையை தாமதமின்றி, தரமாக நிறைவேற்றி தருவது நமது கடமை. இதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும். அரசுக்கும், மக்களுக்கும், அரசு அலுவலர்கள் பாலமாக இருந்து, திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.,க்கள் செல்வகணபதி, மணி, எம்.எல்.ஏ., சதாசிவம், மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.