ADDED : டிச 03, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் : தொடர் மழையால், பயிர்கள் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்-துறை துணை இயக்குனர்
மஞ்சுளா ஆய்வு செய்தார்.ஓமலுார் மற்றும் காடையாம்பட்டி வட்டாரங்களில், தொடர் மழை பெய்து வருகிறது.
மழையால் டேனிஷ்பேட்டை, காடை-யாம்பட்டி தெற்கு, கூ.குட்டப்பட்டி, பண்ணப்பட்டி,
கஞ்சநாயக்-கன்பட்டி ஆகிய பகுதியில் மஞ்சள், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள்
சேமதடைந்துள்ளது. மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மஞ்சுளா,
ஓமலுார் மற்றும் காடையாம்பட்டி வட்டாரங்களில் நே்ற்று ஆய்வு செய்தார். அப்போது
மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்துதல் குறித்து ஆலோசனை
வழங்கினார். உதவி இயக்குனர்கள் (காடையாம்பட்டி) கும-ரவேல், (ஓமலுார்)
சக்கரவர்த்தி உடனிருந்தனர்.