/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புளிய மரத்தில் ராட்சத தேனீ கூடு அழிப்பு
/
புளிய மரத்தில் ராட்சத தேனீ கூடு அழிப்பு
ADDED : ஏப் 23, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, நடுவலுார் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாலகிருஷ்ணன், 50.
இவரது தோட்டத்தின் அருகில் உள்ள புளிய மரத்தில், 'ராட்சத' தேனீ கூடு இருந்தது. இவை, பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து நேற்று மாலை, 6:30 மணியளவில், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்று, மரத்தில் இருந்த ராட்சத தேனீ கூட்டினை, தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.

