/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம்
/
நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம்
நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம்
நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம்
ADDED : மே 09, 2024 06:47 AM
சேலம் : சேலம் வழியே இயக்கப்படும் நெல்லை - தாதர் வார எக்ஸ்பிரஸ் ரயில், மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: யஷ்வந்த்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நெரிசலை தவிர்க்க, யஷ்வந்த்பூர் பைபாஸ் வழியே சில ரயில்கள் திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர் வழியே நெல்லையில் இருந்து தாதருக்கு இயக்கப்படும் வார எக்ஸ்பிரஸ் ரயில், யஷ்வந்த்பூர் பைபாஸில் இயக்கப்படும். இந்த ரயில் ஜூன், 27 முதல், யஷ்வந்த்பூர், பனஸ்வாடி ரயில்வே ஸ்டேஷன்களை தவிர்த்து இயக்கப்படுவதால், பெங்களூரு, சிக்க பனவரா ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் ஜூன், 25ல் தாதரில் இருந்து நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், இந்த நடைமுறை பின்பற்றப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இன்று மாற்றம்வரதாபூர் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பணியால் இன்று யஷ்வந்த்பூர் - கொச்சுவேலி எஸ்பிரஸ், கிருஷ்ணராஜபுரம் வழியே இயக்குவதற்கு பதில் ஓசூர், தர்மபுரி வழியே இயக்கப்படுகிறது. அதேபோல் மைசூர் - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், இன்று கிருஷ்ணராஜபுரம், திப்பத்துார் வழியே இயக்கப்படுவதற்கு பதில் ஓசூர், தர்மபுரி வழியே இயக்கப்படும்.