/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருஊடல் வைபவத்தை ரசித்த பக்தர்கள்
/
திருஊடல் வைபவத்தை ரசித்த பக்தர்கள்
ADDED : பிப் 16, 2025 02:46 AM
தாரமங்கலம்: தைப்பூச தேரோட்டத்தையொட்டி, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் கடந்த, 10ல் சோமாஸ்கந்தர், உமா மகேஸ்வரி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, 11ல் திருக்கல்-யாண கோலத்தில் தேரில் எழுந்தருளச்செய்து, 3 நாள் தேரோட்டம் தொடங்கி, 13ல் நிறைவடைந்தது.
நேற்று காலை நடராஜர் சுவாமிக்கு தேன், பஞ்சாமிர்தம், பால் உள்பட, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்-டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.மாலையில், கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், திருவீதி உலா தொடங்கியது.
ஆனால் அம்பாள், தேர் திருவிழாவுக்கு, சுவாமி சோமாஸ்கந்தர் அவதாரத்தில், உமாமகேஸ்வரியை கல்யாணம் செய்ததால், சண்-டையிட்டு கோபித்துக்கொள்வார். இதில் அங்கிருந்து தனியே அம்பாள், கோவிலுக்கு வந்ததும் ராஜகோபுர கதவு அடைக்கப்-பட்டது.
பின், கோவிலுக்கு வந்த நடராஜர், இருமுறை கதவை தட்டி திறக்-காமல், 3ம் முறை தட்டும்போது திறக்கப்படுகிறது.
தொடர்ந்து உள்ளே இருக்கும் அம்பாளை, நடராஜருடன் சேர்த்து வைக்க, சுந்தரமூர்த்தி வேடமிட்டவர் மற்றும் பூசாரி, பாட்டுப்-பாடி நடராஜருடன் சேர்த்து வைத்த திரு ஊடல் வைபவம் நடந்-தது. இதை, ஏராளமான பக்தர்கள் கூடி நின்று ரசித்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் கோவிலுக்குள் அழைத்துச்செல்லப்-பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இன்று மாலை, 5:00 மணிக்கு, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள குளத்தில் தெப்ப உற்-சவம் நடக்கிறது.
முருகன் திருவீதி உலா
அதேபோல் ஆத்துார் அருகே அப்பம்மசமுத்திரம் செல்லியம்மன் கோவில் தைப்பூச விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, முருகன் சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து சிறு தேரில் அமர செய்து, திருவீதி உலா நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை நடந்தது. பின், 'கந்தனுக்கு அரோகரா' என கோஷம் எழுப்பி, முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலா நடந்தது. அப்போது தேங்காய், பழம், பூ உள்ளிட்டவை கொடுத்து, பக்தர்கள் வழிபட்டனர்.