/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிலைகளில் அழுக்கு நீக்க 'மா காப்பு' பூசிய பக்தர்கள்
/
சிலைகளில் அழுக்கு நீக்க 'மா காப்பு' பூசிய பக்தர்கள்
சிலைகளில் அழுக்கு நீக்க 'மா காப்பு' பூசிய பக்தர்கள்
சிலைகளில் அழுக்கு நீக்க 'மா காப்பு' பூசிய பக்தர்கள்
ADDED : ஏப் 14, 2025 06:34 AM
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷகம் வரும், 20ல் நடக்க உள்ளது. இதனால் அனைத்து சன்னதிகளில் உள்ள பழமையான கற்சிலைகள், குறிப்பாக 12 ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் சிலைகளை சுத்தம் செய்ய, சுந்தரராஜ பெருமாள் பக்த சபை, பக்தர்கள் இணைந்து, 'மா காப்பு' எனும் பாரம்பரிய முறையில் சுத்தம் செய்யும் பணியை நேற்று மேற்கொண்டனர்.
இதுகுறித்து சபை நிர்வாகிகள் கூறுகையில், 'புளித்த தயிர், புளித்த பச்சரிசி மாவு, அப்பளக்காரம் எனும் நாட்டு மருந்து ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து பசை போல் செய்து சிலைகள் மீது பூசி மூடப்பட்டுள்ளது. 2, 3 நாட்கள் காய்ந்த பின் சுத்தமான நீரால் கழுவி, சியக்காய் அரப்பு கொண்டு தேய்த்தால் அழுக்கு, எண்ணெய் பிசுக்கு நீங்கி, சிலை புதிதுபோல் மாறி விடும்' என்றனர்.