ADDED : செப் 06, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, பனமரத்துப்பட்டி பிரிவில் நந்தி மலையில் சூரியலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. சர்வீஸ் சாலையில் இருந்து, மலையில் கோவிலுக்கு பாதை செல்கிறது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில், மாலையில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் அங்கு செல்லும் மலைப்பாதையில், குப்பை குவிந்து கிடக்கிறது. அதில் உணவு தேடி ஏராளமான நாய்கள் முகாமிட்டுள்ளன. அந்த வழியே கையில் பையுடன் செல்லும் பக்தர்களை, உணவுக்காக நாய்கள் துரத்துகின்றன. தின்பண்டம் கிடைக்காத விரக்தியில் மக்களை கடிக்க பாய்கின்றன. நாய்களுக்கு பயந்து ஓடும் பக்தர்கள், மலைப்பாதையில் சறுக்கி விழுகின்றனர். நாய்கள் அட்டகாசத்தால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.