/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 6 தேர்களை துாக்கிச்சென்ற பக்தர்கள்
/
திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 6 தேர்களை துாக்கிச்சென்ற பக்தர்கள்
திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 6 தேர்களை துாக்கிச்சென்ற பக்தர்கள்
திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 6 தேர்களை துாக்கிச்சென்ற பக்தர்கள்
ADDED : செப் 06, 2025 02:14 AM
ஆத்துார் :ஆத்துார், மல்லியக்கரையில் உள்ள, மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்து வருகிறது. நேற்று திரவுபதி அம்மன், மாரியம்மன், அர்ஜூனன், கிருஷ்ணன், நகுலன் மற்றும் சகாதேவன், வீமசேனன் என, 6 தேர்களை, தனித்தனியே வடிவமைத்து, அலங்காரம் செய்தனர். தொடர்ந்து, அந்த தேர்களை, விழா குழுவினர் தோளில் சுமந்து, முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலாவாக சென்றனர். காலை, 9:00 மணிக்கு தொடங்கிய தேர் திருவிழா, மதியம், 2:00 மணிக்கு, கோவிலில் நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
மாலை, 6:00 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
களைகட்டிய எருதாட்டம்
இடைப்பாடி, இருப்பாளியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாரியம்மன் சுவாமி, பல்வேறு அவதாரங்களில் வீதிஉலா வந்தார். நேற்று முன்தினம் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது.
நேற்று மாலை, கோவிலை சுற்றி, 30 காளைகளை கொண்டு எருதாட்டம் நடந்தது. இளைஞர்கள், காளைகளை பிடித்தபடி ஓடினர். அப்போது திமிறிய, துள்ளிக்குதித்த காளைகளை கண்டு, பார்வையாளர்கள்
கரகோஷம் எழுப்பினர்.