/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோட்டை மாரியம்மன் உண்டியலில் ரூ.29 லட்சம் பக்தர்கள் காணிக்கை
/
கோட்டை மாரியம்மன் உண்டியலில் ரூ.29 லட்சம் பக்தர்கள் காணிக்கை
கோட்டை மாரியம்மன் உண்டியலில் ரூ.29 லட்சம் பக்தர்கள் காணிக்கை
கோட்டை மாரியம்மன் உண்டியலில் ரூ.29 லட்சம் பக்தர்கள் காணிக்கை
ADDED : ஆக 19, 2025 01:36 AM
சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல்களில் பக்தர்கள், 83 கிராம் தங்கம் உள்பட 29 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், 10 நிரந்தர உண்டியல்கள், 8 ஆடிப்பண்டிகை உண்டியல்கள் என மொத்தம், 18 உண்டியல்களை நேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா தலைமையில், சேலம் சரக ஆய்வர்-1 பத்மா முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
இதில் ரொக்கமாக, 28 லட்சத்து, 99 ஆயிரத்து, 740 ரூபாய், 83 கிராம் தங்கம், 565 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இது தவிர சில ஆயிரங்கள் பெறுமானமுள்ள வெளிநாட்டு கரன்சிகளும், செல்லாத பழைய, 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி செய்திருந்தார்.