/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாண்கள் சேதத்தால் பக்தர்கள் அச்சம்
/
துாண்கள் சேதத்தால் பக்தர்கள் அச்சம்
ADDED : ஜன 16, 2025 06:55 AM
வாழப்பாடி: வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் பஸ் ஸ்டாப்பில் உள்ள சின்னமாரியம்மன் கோவில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அக்கோவில் நுழைவாயிலில் உள்ள இரு துாண்களும் சேதம் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. 22 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக பராமரிக்கப்படவில்லை என, மக்கள் குற்றம்சாட்டினர். அங்கு வரும் பக்தர்கள் அமர்ந்து செல்வதால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு எச்சரிக்கை பலகை கூட இல்லை. மேலும் வழிபட வருவதற்கே பக்தர்கள் அச்சப்படுகின்றனர். இதனால் அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து அறநிலைத்துறை செயல் அலுவலர் கஸ்துாரி கூறுகையில், ''இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

