/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : மார் 29, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம்,
குமாரசாமிப்பட்டியில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில்
திருவிழாவிவையொட்டி கடந்த, 19ல் பூச்சாட்டுதல் நடந்தது.
நேற்று
அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு
திருக்கல்யாணம் நடந்தது. மாலை குண்டம் இறங்குதல் நடந்தது. அதில்
ஏராளமானோர், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது சில
பெண்கள், கை குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு சென்றனர். பாதுகாப்பு
பணியில் போலீசார், தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். திரளான
பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 8:00 மணிக்கு பால்குட ஊர்வலம்,
மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு தங்க கவசம் சாத்துதல் நடக்கிறது.

