ADDED : ஆக 05, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம், கண்ணனுார் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக, நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள, வேலாயுதசாமி கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் தொடங்கியது.
இதில் பம்பை, மேளதாளம் முழங்க 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம், பால்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலுக்கு வந்தனர். பின் பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தத்தால், அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கட்டளைதாரர்கள், நாட்டாண்மைக்காரர் இனியன், நகராட்சி தலைவர் குணசேகரன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.அதேபோல் சக்தி மாரியம்மன் கோவிலிலும், ஆடி திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.