/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோட்டை அம்மன் கோவிலில் தங்க ரதம் இழுத்த பக்தர்கள்
/
கோட்டை அம்மன் கோவிலில் தங்க ரதம் இழுத்த பக்தர்கள்
ADDED : ஜூலை 11, 2025 02:03 AM
சேலம் :ஆனி பவுர்ணமியையொட்டி, சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று மூலவர் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபி ேஷகம் செய்து தலையில் பட்டு கிரீடம் அணிவித்து, மகாராணி சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.
திரளான பக்தர்கள் வழிபட்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் நடந்த திருவிளக்கு பூஜையில், 108 சுமங்கலி பெண்கள் வழிபட்டனர். இரவு, 'ஓம் சக்தி; பராசக்தி' கோஷம் முழங்க பக்தர்கள் தங்க ரதம் இழுத்து கோவிலை வலம் வந்தனர்.
அதேபோல் இடைப்பாடி அருகே கல்வடங்கம் அங்காளம்மன், சங்ககிரி, சந்தைப்பேட்டை நவ ஆஞ்சநேயர் கோவில்களில், பல்வேறு திவ்ய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தாரமங்கலம் சுப்ர மணியர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
ஆரத்தி பூஜை
சுவேத நதி பகுதியில் உள்ள, தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில், சுவேத நதி ஆரத்தி பூஜை நடந்தது. பவுர்ணமி நிலவு, நிலவின் ஒளியில், ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து, நதியில் பூக்களை துாவி வழிபட்டனர். இப்படி செய்தால், நதி, ஊரின் நீராதாரம் நல்ல நிலையில் இருக்கும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.
ஆத்துார் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் மூலவருக்கு பல்வேறு அபிேஷக பூஜை நடந்தது.
அதேபோல் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.