/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரு மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம்
/
ஒரு மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம்
ADDED : பிப் 23, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்;தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பிப்., 21, 22, 23ல், சுவாமி மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடக்கும்.
முதல் நாள் சூரிய ஒளி விழாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 2ம் நாளான நேற்று, சூரியன் மறையும்போது கைலாசநாதர் மீது விழும் ஒளியை காண, பக்தர்கள் காத்திருந்தனர். மேகமூட்டங்கள் சூரியனை மறைத்ததால் ஒரு மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.