ADDED : ஜன 01, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கால்நடைகளுக்குமலடுநீக்க சிகிச்சை
எருமப்பட்டி, ஜன. 1-
எருமப்பட்டி டவுன் பஞ்., சிங்களகோம்பையில் நீர்வள, நிலவள திட்டம் சார்பில், நேற்று கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை வகித்தார். கால்நடை மருத்துவர்கள் நந்தினி, ராகவன் முன்னிலை வகித்தனர். முகாமில், 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு தடுப்பு சிகிச்சை, அல்ட்ரா ஸ்கேன் மூலம் சினை தடுப்பு சிகிச்சை உள்ளிட்ட சிசிச்சைகள் அளிக்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை, கால்நடை உதவி மருத்துவர் சேகர் செய்திருந்தார்.

