/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி 'ட்ரோன்' பறந்தால் நடவடிக்கை தர்மபுரி மாவட்ட எஸ்.பி., கடும் எச்சரிக்கை
/
அனுமதியின்றி 'ட்ரோன்' பறந்தால் நடவடிக்கை தர்மபுரி மாவட்ட எஸ்.பி., கடும் எச்சரிக்கை
அனுமதியின்றி 'ட்ரோன்' பறந்தால் நடவடிக்கை தர்மபுரி மாவட்ட எஸ்.பி., கடும் எச்சரிக்கை
அனுமதியின்றி 'ட்ரோன்' பறந்தால் நடவடிக்கை தர்மபுரி மாவட்ட எஸ்.பி., கடும் எச்சரிக்கை
ADDED : ஏப் 25, 2025 01:39 AM
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில், அனுமதியின்றி பறக்க விடப்படும், 'ட்ரோன்' உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சம்பவம் எதிரொலியாக, தர்மபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, எஸ்.பி., மற்றும் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் தலைமையில், 400 போலீசார் மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், புதிய பட்டர்பிளை மேம்பாலம், நான்கு ரோடு, பஸ் ஸ்டாண்ட், அதையொட்டிய நகைக்கடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ் அமைந்துள்ள பகுதி, தொப்பூர் கணவாய் ஆகிய இடங்களில் அதிகளவில், 'ட்ரோன்'கள் மூலம், சிலர் வீடியோ எடுத்து அதை, சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது கொள்ளை, திருட்டு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதென, வணிகர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரனிடம் கேட்டபோது அவர் கூறுகையில்,
'' தர்மபுரி மாவட்டத்தில், 'ட்ரோன்' பயன்படுத்துவோர் திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு, உள்ளரங்கில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் அனுமதி பெற தேவையில்லை. அதிக எடை கொண்ட, 'ட்ரோன்'களை இயக்கும் நபர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே நிறுவனம் சார்பில் திட்ட மதிப்பீடு அறிக்கை தாக்கல் செய்யும் பணிக்காக, 'ட்ரோன்'கள் மூலம் வீடியோ எடுக்க, உரிய அனுமதி பெற்று வருகின்றனர். இதில், 250 கிராம் எடைக்கும் மேற்பட்ட, 'ட்ரோன்'கள் பொது இ
டங்கள், அரசுக்கு சொந்தமான இடங்களில் பறக்க விட, அனுமதி கட்டாயம் பெற வேண்டும். மாவட்டத்தில், 'ட்ரோன்'கள் வைத்துள்ளவர்கள் அவர்களாக மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். போலீசார் அனுமதியின்றி, எந்த ஒரு பகுதியிலும் 'ட்ரோன்'கள் மூலம் வீடியோ எடுப்பது தெரியவந்தால், சம்மந்தபட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரீல்ஸ், யூ டியூப் பயன்படுத்துவோர், தர்மபுரி நகரை வீடியோ எடுக்க அனுமதி பெற்றிருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான வகையில், வீடியோ எடுப்பது, வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

