/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., கூட்டத்தில் வேட்டி, சேலை வழங்கல்
/
அ.தி.மு.க., கூட்டத்தில் வேட்டி, சேலை வழங்கல்
ADDED : ஜூலை 10, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், அ.தி.மு.க.,வின், ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி, கட்சி முன்னோடிகளை சந்திந்து மரியாதை செலுத்தி, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஆலோசனை கேட்டு கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி ஓமலுார் நகர செயலர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம், ஓமலுாரில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., மணி ஆலோசனை நடத்தினார்.
பின் கட்சியினர், 500 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. ஓமலுார் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் செந்தில், விமல்ராஜ், மணிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.