தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வெவ்வேறு விபத்து: 2 தொழிலாளி பலி

வெவ்வேறு விபத்து: 2 தொழிலாளி பலி

வெவ்வேறு விபத்து: 2 தொழிலாளி பலி


ADDED : செப் 21, 2026 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே வாழக்குட்டப்பட்டி ஊராட்சி மூங்கிலேரியை சேர்ந்தவர் சின்னபிள்ளை, 68. கூலி வேலை செய்து வந்தார். நேற்று அம்மாபாளையத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்-றுவிட்டு, மாலை, 4:15 மணிக்கு, அம்மாபாளையம் பஸ் ஸ்டாப் வந்தார். அங்கு வந்த டவுன் பஸ்சில் ஏற, சேலம் - நாமக்கல் நெடுஞ்

சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம், சின்னபிள்ளை மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல் நரசிங்கபுரம், சின்னப்ப நகரை சேர்ந்தவர் மாதையன், 51. இவர், தலைவாசல், மணிவிழுந்தான் வடக்கு புதுாரில், உறவினர் வெங்கடேஷூடன் கிணறு வெட்டும் தொழில் செய்தார். நேற்று முன்தினம் மாலை, கூலியை பெற்றுச்-சென்ற அவர், சம்பேரியில், 'போதை'யில் சுற்றித்திரிந்தார். இரவு, 7:15 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மாதையன் படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் வழியில் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.அடையாளம்

தெரியாதவர்

காரிப்பட்டி போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு, பத்தாங்-கல்மேடில் ரத்தக்காயங்களுடன், 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், 'இன்னோவா கிரிஸ்டா' கார் மோதி, அவர் இறந்தது தெரிந்தது. ஆனால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், விபத்து ஏற்படுத்தியவர் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us