தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் தேவை

துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் தேவை

துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் தேவை


ADDED : செப் 21, 2026 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலத்தில், டிஸ்ட்ரிக்ட் கார்ப்பரேஷன், முனிசிபல் ஒர்க்கர்ஸ் யுனியன் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட மாநாடு, நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தினேஷ் தலைமை வகி த்தார். கம்யூ., - திருத்-துறைப்பூண்டி எம்.எல்.ஏ., மாரிமுத்து பேசினார்.

சேலம் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பணியாளர்-களின் கூட்டுறவு சேம நல நிதி, துாய்மை பணியாளர்களின் ஊக்க நிலுவை தொகைகளை உடனே சம்பந்தப்பட்ட துறைகளில் செலுத்தல்; உள்ளாட்சிகளில் ஞாயிறில் பணிபுரியும் டிரைவர், துாய்மை பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்குவதோடு, அவர்களுக்கு சீருடை, தையல் கூலி, கையுறை, ரெயின் கோட், காலணி, சோப் போன்ற பாதுகாப்பு உப-கரணங்கள் வழங்குதல்; மாநகராட்சிகளில், 10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும், படித்த துாய்மை பணியாளருக்கு, கல்வி தகுதிக்-கேற்ப பதவி உயர்வு வழங்குதல்; தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us