/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2026ல் கூட்டாட்சிக்கு வாய்ப்பு சேலத்தில் தினகரன் பேட்டி
/
2026ல் கூட்டாட்சிக்கு வாய்ப்பு சேலத்தில் தினகரன் பேட்டி
2026ல் கூட்டாட்சிக்கு வாய்ப்பு சேலத்தில் தினகரன் பேட்டி
2026ல் கூட்டாட்சிக்கு வாய்ப்பு சேலத்தில் தினகரன் பேட்டி
ADDED : டிச 11, 2025 05:33 AM
சேலம்: ''வரும், 2026 சட்டசபை தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும். யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. கூட்-டாட்சி அமைய வாய்ப்புள்ளது,'' என, அ.ம.மு.க., பொதுச்செ-யலர் தினகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து சேலத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
வரும், 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு, தமிழ-கத்தில் சில கட்சிகளுடன்
கூட்டணி குறித்து பேசி வருகிறோம். இதுகுறித்து விரைவில் அறி-விக்கப்படும். அ.ம.மு.க., தேர்தலை நோக்கி பயணிக்கிறது. அண்ணா
மலையை சந்தித்தது நட்பு ரீதியானது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதங்களை கடந்து வாழும் மக்கள் இடையே அரசியலுக்காக யாரும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என தான் நினைக்கும்.
அப்போதுதான் அவரவர் தொகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. 2026 சட்டசபை தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும். யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. கூட்டாட்சி அமைய வாய்ப்-புள்ளது. த.வெ.க., கூட்டணி வலுவாக இருந்தால், தி.மு.க.,வுக்கு கடும் போட்டியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

