/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ரிசர்வ் வங்கி' பெயரில் பலரிடம் மோசடி பா.ம.க., நிர்வாகி உள்பட 2 பேர் கைது
/
'ரிசர்வ் வங்கி' பெயரில் பலரிடம் மோசடி பா.ம.க., நிர்வாகி உள்பட 2 பேர் கைது
'ரிசர்வ் வங்கி' பெயரில் பலரிடம் மோசடி பா.ம.க., நிர்வாகி உள்பட 2 பேர் கைது
'ரிசர்வ் வங்கி' பெயரில் பலரிடம் மோசடி பா.ம.க., நிர்வாகி உள்பட 2 பேர் கைது
ADDED : டிச 11, 2025 05:33 AM

சேலம்:'ரிசர்வ் வங்கி' பெயரில், 150க்கும் மேற்பட்டோரிடம், 3.50 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், பா.ம.க., நகர செயலர் உள்பட, 2 பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்-தனர்.
சேலம், நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில், ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி, பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து, 20 பேரை கைது செய்-தனர். மேலும் சிலரை தேடினர்.இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலுார், ஆர்.சி.செட்டிப்பட்-டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் செல்லதுரை, 52, ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த, பா.ம.க., நகர செயலர் தினேஷ்-குமார், 35, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வீட்டில் சோதனை செய்து, முக்கிய ஆவ-ணங்கள், மடிக்கணினி, மொபைல் போன்களை கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'செல்லதுரை, தினேஷ்குமார் ஆகியோர், கருப்புசாமி பெயரில் அறக்கட்டளை நடத்தி, ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி இரிடியம் பெற்று தருவதாக கூறி, சேலம், தர்மபுரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், 150க்கும் மேற்பட்டோரிடம், 3.50 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்-ளனர்.
அதில், 20க்கும் மேற்பட்டோரை, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என போலி நபர்-களை காட்டி, பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.

