/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வணிக வளாகத்துக்கு தொடரும் எதிர்ப்பு நில அளவீடு பணியை முடித்த அதிகாரிகள்
/
வணிக வளாகத்துக்கு தொடரும் எதிர்ப்பு நில அளவீடு பணியை முடித்த அதிகாரிகள்
வணிக வளாகத்துக்கு தொடரும் எதிர்ப்பு நில அளவீடு பணியை முடித்த அதிகாரிகள்
வணிக வளாகத்துக்கு தொடரும் எதிர்ப்பு நில அளவீடு பணியை முடித்த அதிகாரிகள்
ADDED : டிச 11, 2025 05:34 AM
வாழப்பாடி: 'தாட்கோ' வணிக வளாகம் கட்ட, மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரி-வித்த நிலையில், நில அளவீடு பணியை முடித்துவிட்டு அதிகா-ரிகள் சென்றனர்.
வாழப்பாடி அருகே பேளூரில், அயோத்தியாப்பட்டணம் பிரதான சாலையில், டவுன் பஞ்சாயத்து வாரச்சந்தை நிலத்தில், 25 ஆண்-டுக்கு முன், 'தாட்கோ' நிறுவனம் மூலம், 10 சிறு கடைகள் அடங்கிய வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆனால் பயன்பாட்-டுக்கு கொண்டு வரப் படாமல் பாழடைந்து கிடந்தது.அந்த கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக கட்ட, ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். கடந்த மாதம், பழைய கட்-டடம் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து புதிதாக கட்ட, 'தாட்கோ' நிறுவனம், 99 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்றது.
அங்கு வணிக வளாகம் கட்டினால், அதற்கு பின்னால் அமைக்கப்-பட்டுள்ள, டவுன் பஞ்சாயத்து வாரச்சந்தை கடைகளுக்கு, விவசா-யிகள், வியாபாரிகள், நுகர்வோர் சென்று வருவதில் சிரமம் ஏற்-படும் எனக்கூறி, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கடந்த அக்., 25ல் அங்கு ஆய்வு செய்தார்.
இதையடுத்து வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் முன்னிலையில், 'தாட்கோ' அதிகாரிகள், நேற்று வணிக வளாக கட்டும் பணிக்கு நில அளவீடு மேற்கொண்டனர். அப்போது திரண்டு வந்த மக்கள், வணிக வளாகம் கட்ட மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்-புடன், நில அளவீடு பணியை முடித்துவிட்டு, அதிகாரிகள் சென்-றனர்.

