sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தீபாவளி பட்டாசு கடை வைக்க "லைசென்ஸ்' :விண்ணப்பிக்க கமிஷனர் அழைப்பு

/

தீபாவளி பட்டாசு கடை வைக்க "லைசென்ஸ்' :விண்ணப்பிக்க கமிஷனர் அழைப்பு

தீபாவளி பட்டாசு கடை வைக்க "லைசென்ஸ்' :விண்ணப்பிக்க கமிஷனர் அழைப்பு

தீபாவளி பட்டாசு கடை வைக்க "லைசென்ஸ்' :விண்ணப்பிக்க கமிஷனர் அழைப்பு


ADDED : ஆக 29, 2011 01:07 AM

Google News

ADDED : ஆக 29, 2011 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளை வைக்க விரும்புவோர், அதற்கான தற்காலிக உரிமம் பெற, செப்டம்பர் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகை அக்டோபர் 26ல் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் செப்டம்பர் 9ம் தேதி, மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பும் விண்ணப்பங்களுடன், படிவம் ஏ.ஈ.,5ல் இரண்டு ரூபாய் நீதிமன்ற வில்லை (ஸ்டாம்பு) ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். உரிமம் பெற கட்டணமாக, 500 ரூபாய், கருவூலகம், வங்கியில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம், இருப்பு வைத்துள்ள (குடோன்) இடங்களின் வரைபடங்களின் நகல்கள் ஆறு இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்விடம் சொந்த கட்டிடமாக இருப்பின் சொத்து வரி ரசீதும் இணைக்க வேண்டும். வாடகை கட்டிடமாக இருப்பின், சொத்து வரி ரசீதுடன், கட்டிட உரிமையாளரின் சம்மதக் கடிதம், 20 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாளில் சாட்சிக் கையொப்பத்துடன் (முகவரிகளுடன்) இணைத்து வழங்க வேண்டும். மாநகராட்சிக்கு உரிமம் கட்டணம் செலுத்திய ரசீது, மாநகாரட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பிற துறைகளின் கட்டிடமாக இருப்பின் ஆட்சேபணையின்மை கடிதம் இணைத்து வழங்க வேண்டும். இவற்றுடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இணைக்கபட வேண்டும். இந்த ஆவணங்களுடன் கூடிய முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டும், செப்டம்பர் 8ம் தேதி, மாலை 5 மணி வரை பெறப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் போலீஸ் துறையினரால் திருப்தி அடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும். வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுத்துறை அறிவுரைப்படி சாலையோரக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது. விண்ணப்பங்களை வழங்குவதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. * சேலம் மாநகர பொதுமக்களின் நலன் கருதி புகார்களை வழங்கும் வகையில் போலீஸ் துறை சார்பில் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் புகார்கள், பயனுள்ள தகவல்களை அனுப்புவதற்காக போலீஸ் துறையில் இணையதளம் துவக்கப்பட்டு பயன் பாட்டில் உள்ளது. போலீஸ் துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்ப விரும்புவோர் இணையதள முகவரியில் டttணீ://தீதீதீ.tணணீணிடூடிஞிஞு.ஞ்ணிதி.டிண சென்று மெயில் யுவர் கம்ப்ளய்ன்ட் (தங்களின் புகாரை அனுப்ப) என்ற பகுதியில் தங்கள் புகார், தகவல்களை போலீஸ் கமிஷனருக்கோ, துணை கமிஷனருக்கோ நடவடிக்கை எடுக்க அனுப்பலாம். புகார்கள் தொடர்பாக, தங்களுக்குப் பதில் அனுப்பப்படும். ஏற்கனவே நடவடிக்கையில் உள்ள குற்ற வழக்குகள், முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டவர்கள் இந்த வசதியை பயன் படுத்தக் கூடாது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் காணாமல் போன நபர்கள், அடையாளம் காண முடியாத பிணங்கள், போலீஸாருக்கு சாதகமான தகவல்களை இந்த இணைய தள முகவரியில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us