/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயிலில் பெண்களிடம் மொபைல் திருடிய திண்டுக்கல் முதியவர் கைது
/
ரயிலில் பெண்களிடம் மொபைல் திருடிய திண்டுக்கல் முதியவர் கைது
ரயிலில் பெண்களிடம் மொபைல் திருடிய திண்டுக்கல் முதியவர் கைது
ரயிலில் பெண்களிடம் மொபைல் திருடிய திண்டுக்கல் முதியவர் கைது
ADDED : ஏப் 23, 2024 03:51 AM
சேலம்: சேலம் வழியாக, கேரளா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்களின் மொபைல் போன், வாட்ச் திருடிய திண்டுக்கல்லை சேர்ந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து, கேரள மாநிலம் கண்ணுாருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் கடந்த, 8ல் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பர்ச்சனா, 32, டோனி, 41, ஆகியோர் பயணித்துள்ளனர். மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் சென்ற நிலையில், பர்ச்சனா தனது ேஹண்ட் பேக்கை காணாததால் தேடி உள்ளார்.
அவரின் பேக் கழிவறை அருகே கிடந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த போது பேக்கில் இருந்த ஐ-போனை காணவில்லை. இது குறித்து அவர், ஈரோடு ரயில்வே போலீஸ்க்கு கொடுத்த தகவல்படி, அவர்கள் சேலத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மொபைல் போனின் இருப்பிடத்தை ஆய்வு செய்த போது, சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே காட்டியது.
போலீசார் விசாரணையை தொடர்ந்த நிலையில், வாலிபர் ஒருவர் தன்னிடம் முதியவர் வந்து மொபைல் போனை தந்து அதனை சரி செய்து தரும்படி கேட்டதாகவும். தான் சந்தேகம் அடைந்த நிலையில், அவர் ஓடி விட்டதாக தெரிவித்து, மொபைல் போனை, ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார். ரயில்வே போலீசார் அந்த போனை பாதிக்கப்பட்ட பெண் பர்ச்சனாவிடம் வழங்கினர்.
கேரள மாநிலம் கண்ணுாரை சேர்ந்த அருண் தினேஷ், 38. தனது மனைவியின் மொபைல் போன் திருடப்பட்டு விட்டதாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட முதியவரை 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர்.
அதில் திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை சேர்ந்த ரங்கராஜன், 52, என்பதும், செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் முகாமிட்டு இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

