/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஏப் 25, 2025 01:40 AM
அரூர்:
வீட்டுமனை பட்டா கேட்டு, அரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த, 10 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டியும், மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக பேசும், அரூர் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழக முதல்வரின் கவனத்திற்கு செல்லும் வகையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, அரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், அனைத்து மாற்றுத்திறனாளிகளின் உரிமை மீட்பு குழு சார்பில், மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் கண்ணன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.