ADDED : மே 02, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே வள்ளுவர்புரத்தை சேர்ந்தவர் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தராஜ், 35. இவர் நேற்று அதே பகுதியில், இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது,
அங்கு முகாமிட்டிருந்த ஒற்றை யானை, அவரை விரட்டி தாக்கியது. இதில் காலில் படுகாயமடைந்த அவர், சத்தம் போடவே, கிராம மக்கள் வந்தனர். யானை அங்கிருந்து வனப்பகுதி நோக்கி சென்ற நிலையில், படுகாயமடைந்த கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.