ADDED : ஆக 01, 2024 08:01 AM
மகுடஞ்சாவடி : பெருமாகவுண்டம்பட்டி
அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 60. இவர், 30 ஆண்டுகளாக
இளம்பிள்ளை டவுன் பஞ்சாயத்தில் துாய்மை பணியாளராக பணியாற்றினார். நேற்று
பணி ஓய்வு பெறவிருந்தார். காலை, 6:00 மணிக்கு அலுவலகம் வந்து
கையெழுத்திட்டு, 7:00 மணிக்கு இளம்பிள்ளை மார்க்கெட் அருகே வந்தார்.
அப்போது வாந்தி எடுத்து மயங்கினார்.
உடன் வந்த சுகாதார மேற்பார்வையாளர்
பொன்னுசாமி, 50, அவரை இருசக்கர வாகனம் மூலம் அழைத்துச்சென்று இளம்-பிள்ளை
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார். உறவினர்-களுக்கு தகவல்
அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆம்புலன்ஸ் மூலம் இளம்பிள்ளையில் உள்ள
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்தபோது,
அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
பணி ஓய்வு பெறவிருந்த நாளில் உயிரிழந்தது, பணியாளர்கள் இடையே சோகத்தை
ஏற்படுத்தியது.