sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'அரசு பணியாளர்கள் ஏமாற்றம் ஓட்டுப்பதிவில் எதிரொலிக்கும்'

/

'அரசு பணியாளர்கள் ஏமாற்றம் ஓட்டுப்பதிவில் எதிரொலிக்கும்'

'அரசு பணியாளர்கள் ஏமாற்றம் ஓட்டுப்பதிவில் எதிரொலிக்கும்'

'அரசு பணியாளர்கள் ஏமாற்றம் ஓட்டுப்பதிவில் எதிரொலிக்கும்'


ADDED : மார் 17, 2025 03:47 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ''அரசு பணியாளர், ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றா-விட்டால், ஓட்டுப்பதிவில் நிலைப்பாட்டை வெளிப்படுத்-துவோம்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துார்.

இதுகுறித்து, சேலத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு, அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அரசு பணி-யாளர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்த கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம், நிரந்-தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களின் பிரச்னைகள் தீர்க்-கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. சரண் விடுப்பு, ஒப்புவிப்பு ஊதியம், 2026 ஏப்ரல் முதல் வழங்-கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அரசு பணி-யாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் ஓட்டுப்பதிவில் எங்கள் நிலைப்பாட்டை வெளிப் படுத்துவோம்.பொது வினியோக திட்டத்தில் விரல் ரேகை பதிவு, 90 சதவீதம் இருக்க வேண்டும் என்ற உத்தரவு, பணியாளர், நுகர்வோர் இடையே பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. ரேஷன் கடைக்கு சரி-யான எடை அளவில் பொருட்கள் வழங்குவதில்லை என்ற குற்-றச்சாட்டு தொடர்ந்து நீடிக்கிறது. அதை நிவர்த்தி செய்யாமல் ரேஷன் கடையில் இருந்து, நுகர்வோருக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்க, புது தொழில்நுட்பம் புகுத்தியுள்ளது கேலிக்-கூத்து. அதனால் தமிழக அரசு தலையிட்டு, பொது வினியோ-கத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us