ADDED : செப் 30, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்; வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக, ஓமலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் தர்ம-லிங்கம் தலைமையில் வீரர்கள், முத்துநாயக்-கன்பட்டியில் உள்ள ஏரியில் நேற்று, மக்கள் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சி
நடத்தினர்.
குறிப்பாக பேரிடர் காலங்களில் நீர்நிலைகளில் சிக்கினால் எவ்வாறு தப்பிப்பது, தற்காத்துக்-கொள்வது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் நவீன உபகர-ணங்களை, மக்களுக்கு காட்சிப்படுத்தினர்.
